வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

சாப நிவர்த்தி தரும் மகாலட்சுமி மந்திரம் !!

மகாலட்சுமி மந்திரத்தை தினமும் அல்லது வெள்ளிக்கிழமைகளில் சொல்லி வழிபாடு செய்து வந்தால் அனைத்து விதமான சாபமும் நிவர்த்தியாகும்.


சக்தி வழிபாடு  செய்யச் செய்ய மனோ வலிமை கூடும். குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். வீட்டில் பூஜையறையில் விளக்கேற்றி, வெள்ளிக்கிழமை தோறும் மகாலக்ஷ்மியை மனதார வேண்டிக்கொள்ளுங்கள். வேண்டியதையெல்லாம் தந்தருள்வாள் தேவி.
 
மந்திரம்:
 
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஸ்ரீம் மஹாலக்ஷ்மி ஆகச்ச ஆகச்ச,
மம மந்திரே திஷ்ட திஷ்ட ஸ்வாஹா
 
மகாலக்ஷ்மியின் மூல மந்திரம்:
 
ஓம் ஸ்ரீம் க்லீம் மகாலக்ஷ்மி
மகாலக்ஷ்மி ஏய்யேஹி
ஏய்யேஹி சர்வ
ஸெளபாக்யம் மே தேஹி ஸ்வாஹா
 
இது பலிச்சக்ரவர்த்தியால் அனுஷ்டிக்கப்பட்டது. இதனை ஆறு லட்சம் முறை ஜபிக்க சித்தியாகி லக்ஷ்மி கடாக்ஷம் ஏற்படும். பொய் சொல்லாமை சாஸ்திரங்களில்  ஒதுக்கியவற்றை நீக்கி, ஒழுக்கத்துடன் இருப்போருக்கு விரைவில் பலனளிக்கும். இதற்கு சாப நிவர்த்தியாகவும், விரைவில் சித்தியாகவும் ஊருக்கு வெளியே உள்ள  கறும் எறும்பு (பிள்ளையார் எறும்பு) புற்றுக்கு அரிசி, நெய், சர்க்கரை கலந்து 48 தினங்கள் போட்டு வரவும்.