புதன், 25 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

காரடையான் நோன்பின் சிறப்புக்கள் பற்றி தெரிந்துக்கொள்வோம்...!!

மாசி மாதமும் பங்குனி மாதமும் கூடும் நாளில் அதாவது மாசி மாத கடைசி நாள் நிறைவடைந்து, பங்குனி மாதத்தின் முதல் நாள் தொடக்கத்திற்கு இடைப்பட்ட நேரமே காரடையான் நோன்பு ஆகும்.

கணவரின் ஆயுளை பலப்படுத்தும் விரதமான காரடையான் நோன்பு கொண்டாடப்படுகிறது. இந்தநாளில், உரிய முறைப்படி நோன்பு பூஜையை பெண்கள்  மேற்கொண்டால், கணவரின் ஆயுள் நீடிக்கும். பெண்களின் மாங்கல்ய பலம் கூடும் என்று போற்றுகிறது சாஸ்திரம்.
 
பெண்கள் கடைபிடிக்கும் விரதங்களிலேயே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது காரடையான் நோன்பு வட இந்தியாவிலும் சுக்கிரனின் பலம் நிறைந்த வைகாசி  மாதத்தில் பெளர்ணமி திதியன்று சுக்கிர வாரத்தில் “வட சாவித்திரி விரதம்” என்ற பெயரில் அனுஷ்டிக்கப்படுகிறது.
 
கணவரும் மனைவியுமாக இணைந்தும் இயைந்தும் வாழ்வதே இல்லறம். ஒருவரின்றி ஒருவரில்லை என்று இணையாகவும் விட்டுக்கொடுத்தும் வாழ்வதே வாழ்க்கையின் தாத்பரியம். 
 
திருமணமாகியிருக்கும் எல்லா பெண்களையும் வாழ்த்தும் போது சொல்லக் கூடிய மிக முக்கியமான வாசகம் ‘தீர்க்கசுமங்கலி பவ’. அப்படி தீர்க்க சுமங்கலியாகத் திகழ வேண்டும் என்பதுதான் பெண்களின் மிகப்பெரிய ஆசை, கனவு, விருப்பம். அதற்கு கணவரின் ஆயுள் பலம் வேண்டும். அதைப் பெறுவதற்குத்தான் விரதங்களும் பூஜைகளும் மந்திரங்களும் சொல்லப்பட்டிருக்கின்றன. நமக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அப்படியான வழிபாடுகளில்  மிக முக்கியமானது என்று பெண்களால் போற்றப்படுவதுதான் ‘காரடையான் நோன்பு’.