திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

மகத்துவம் நிறைந்த மாசி மாத விரதங்கள் !!

மகத்துவம் நிறைந்த மாசி மாதத்தில் வசந்த பஞ்சமி, ரத சப்தமி, மாசி மகம், மகா சிவராத்திரி, உள்ளிட்ட பல பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. மாசி மாதத்தில் சூரியன் கும்பம் ராசியில் பயணம் செய்கிறார். எனவே கும்பமாதம் என்றும் போற்றப்படுகிறது. 

இம்மாதம் முழுவதும் புனித நீராட ஏற்ற காலமாகும். இந்தியாவில் உள்ள அனைத்து புண்ணியத் தீர்த்தங்களிலும், சமுத்திரக் கரையிலும், புனித நதிகளிலும் மாசி மாதத்தில் அமிர்தம் நிறைந்திருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. இதன் காரணமாகவே இந்த மாதத்தில் நீர்நிலைகளில் புனித நீராடுவதை இந்துக்கள் பழக்கமாகக்  கொண்டுள்ளனர்.
 
வட இந்தியாவில் கும்பமேளா என்ற பெயரில் வெகு விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள். கும்ப மாதத்தில் நடைபெறும் விழா என்பதால் இது கும்பமேளா. பொதுவாக அமாவாசை நாட்களில் தர்ப்பணம் செய்வது வழக்கம். ஆனால், கிரஹண காலம் தவிர்த்து, பௌர்ணமி நாளில் தர்ப்பணம் செய்வது என்பது மாசி  மாதத்தில் மட்டுமே. 
 
பெளர்ணமிகளில் மாசிப் பெளர்ணமி அன்று மட்டும்தான் மறைந்த முன்னோர்களுக்கு சிரார்த்தம் நடத்தப்படுகிறது.
 
மாசி மாத அமாவாசை நாளில், அனைத்து அங்காள பரமேஸ்வரி ஆலயங்களிலும் மயானக் கொள்ளை விழா நடைபெறும்.