திங்கள், 25 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By ஆனந்த குமார்
Last Updated : புதன், 13 மார்ச் 2019 (16:41 IST)

கரூர்: அருள்மிகு ஸ்ரீ சோளியம்மன் முத்துசாமி ஆலய 29-ம் ஆண்டு திருவிழா

கரூர் அடுத்த வெங்கமேடு கொங்குநகரில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ சோளியம்மன் முத்துசாமி ஆலய 29-ம் ஆண்டு திருவிழா நிகழ்ச்சியையொட்டி மாவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது.
கரூர் அடுத்த வெங்கமேடு கொங்குநகரில் வீற்று அருள்பாலிக்கும் ஸ்ரீ சோளியம்மன் – முத்துசாமி ஆலயத்தின் 29 ம் ஆண்டு பொங்கல் வேல் திருவிழா நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக தொடங்கி நடைபெற்று வருகின்றது.

வேல்நிலைநாட்டுதல் நிகழ்ச்சியுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய இந்நிகழ்ச்சியில், திங்கள் கிழமை இரவு பொங்கல் மாவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது. மூலவர் சோளியம்மனுக்கு விஷேச  அலங்காரங்கள் செய்யப்பட்டு, மஹா தீபாராதனை நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
 
முன்னதாக உற்சவராக அருள்மிகு ஸ்ரீ முத்துசாமி சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பக்தர்கள் மாவிளக்கு எடுத்து வந்து அம்மனுக்கும், சுவாமிக்கும் படைத்து கடவுள் அருள் பெற்றனர். இதற்கான முழு  ஏற்பாடுகளை வெங்கமேடு கொங்குநகர் ஊர் பொதுமக்கள் மற்றும் திருவிழா கமிட்டியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர். செவ்வாய்கிழமையான  இன்று (12-03-19) இரவு வேல் புறப்பாடு வீதி உலா மஞ்சள் நீர் விளையாட்டு விழா சிறப்பாக நடைபெற உள்ளது.