வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By c. anandakumar
Last Modified: செவ்வாய், 5 மார்ச் 2019 (20:51 IST)

தி.மு.க - காங்கிரஸை வீழ்த்துவதுதான் அ.தி.மு.க., கூட்டணியின் பிரச்சாரம் - மு.தம்பிதுரை

கரூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 60 இடங்களில் காலை முதல் மாலை வரை பொது மக்களிடம் மனுக்களை பெற்று வருகிறார். 
கரூர் மாவட்டம் காணியாளம்பட்டி கிராமத்தில் பொது மக்களிடம் மனுக்களை பெற்ற பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கும் போது, அடுத்த பிரதமராக மோடியைதான் மக்கள் விரும்புகிறார்கள்.
 
கடந்த காலங்களில் பாரதிய ஜனதா கட்சி, மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியுடன் அ.தி.மு.க., கட்சி கூட்டணி வைத்திருந்தது. 
 
தமிழகத்தின் நலனுக்காக மத்தியில் நிலையான ஆட்சி மத்தியில் நிலையான ஆட்சி அமைய சில கொள்ளை முடிவுகளை கழகம் எடுக்கிறது. இதற்காக வலிமை குறைந்து விட்டதாக சொல்ல முடியாது, எங்களுக்கு வலிமை கூடி தான் இருக்கிறது. 
 
நாடாளுமன்றத்தில் எதிர்கட்சியாக செயல்பட்டோம் இதனால் தமிழகத்தில் பல திட்டங்கள் வராமல் போனது, இதுதான் பல திட்டங்கள் முழுமையாக கிடைத்து வருகிறது. மத்திய ஆட்சியில் பங்கேற்க வாய்ப்பு இருக்கிறது என்றார்.