திங்கள், 2 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

எலுமிச்சை பழத்தை வைத்து தீய சக்திகளின் ஆதிக்கம் இருப்பதை எவ்வாறு கண்டிபிடிக்கலாம்...?

காயாக பச்சை நிறத்தில் இருக்கும் எலுமிச்சை பழத்தை எடுத்து, அதை மஞ்சள் துணியில் வைத்து, அந்த ந்லுமிச்சை பழத்தோடு, ஒரு விரலி மஞ்சள், ஒரு மூங்கில் குச்சி மட்டும் வைத்து, மஞ்ச நூலில் முடிச்சாக கட்டி வீட்டு வாசல் படியில் மாட்டி விடுங்கள்.

இதனை 11 நாட்கள் வரை அப்படியே வைத்து பதினோரு நாட்கள் கழித்து பின்பு, அந்த கிடிச்சை அவிழ்த்து பார்த்தால், உள்ளே வைத்த எலுமிச்சை பழமானது வாடாமல், வதங்காமல் அப்படியே இருக்கும் பட்சத்தில், வீட்டிற்கு கண்ணுக்கு தெரியாத சக்திகளின் மூலம் எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்று தெரிந்து  கொள்ளலாம்.
 
அதுவே அந்த எலுமிச்சை பழம் காய்ந்த நிலையிலோ அல்லது கருப்பு நிறத்தில் மாறி இருந்தாலோ, உங்கள் வீட்டில் கட்டாயம் ஏதோ ஒரு கெட்ட சக்தியின்  ஆதிக்கம் இருக்கிறது என்று நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
 
பரிகாரம்: வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை அன்று விரதமிருந்து துர்க்கை அம்மனை மனதார வேண்டிக்கொண்டு, எலுமிச்சை பழத்தையும், வேப்பிலையையும் சேர்த்து மாலையாக அணிவித்து தொடர்ந்து ஐந்து வாரங்கள் வழிபட வேண்டும்.
 
புதிதாக வாங்கிய எலுமிச்சை பழத்தை துர்கை அம்மன் மடியில் வைத்து எடுத்து வந்து, உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து, தொடர்ந்து பூஜை செய்து வந்தால், வீட்டில் இருக்கும் கெட்ட சக்தியின் ஆதிக்கம் உங்களை எதுவும் செய்யாது.