ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

விநாயகருக்கு தோப்புக்கரணம்: முன்னோர்கள் பின்பற்றிய ஆன்மிக பழக்கங்கள்....!

விநாயகரை நாம் தோப்புக்கரணம் போட்டு, நெற்றியில் குட்டிக் கொண்டு வணங்குகிறோம். அதனால் நமது உடல் சுறுசுறுப்பாகும். தியனாம் செய்யும் போது தலையில் குட்டிக் கொண்டு வணங்குவதால் மனதை ஒருநிலைப்படுத்த வழிவகுக்கும் என்பது நம்பிக்கை.
தினம் தோப்புக்கரணம் உடற்பயிற்சியை செய்ய மூளை சிறப்பாக செயல் படும். நமக்கு நினைவாற்றலை அதிகம் கொடுத்து யோசிக்கும்  திறனை சம நிலையில் வைக்கும்.
 
தோப்புக்கரணம் தினம் சிறிது நேரம் செய்ய வலது மூளை இடது மூளை இரண்டும் நன்கு சீராக செயல் பட்டு நினைவு திறனை அதிகரிக்கும்.
 
தோப்புக்கரணம் என்பதே இரு கைகளையும் கொண்டு இரு காதுகளையும் பிடித்து கொண்டு உட்கார்ந்து உட்கார்ந்து எழ வேண்டும்.
 
தோப்புக்கரணம் செய்யும் போது அடிக்கடி உட்கார்ந்து எழும்புவதால் சுவாச உறுப்புகள் சீராக அமையும். இதனால் நமக்கு தேவையான  ஆக்ஸிஜனை நன்கு சுவாசிக்க முடியும்.
 
இரு கைகளாலும் காதுகளை பிடிப்பதால் காதுகள் மூலம் மூளைக்கு செல்லும் அனைத்து நரம்புகள் நல்ல வளர்ச்சி மற்றும் உணர்ச்சி பெற்று  மூளையை தூண்டும்.
 
இனி தினமும் காலை தோப்புக்கரணம் செய்யுங்கள் மூளையை வைத்து நினைவாற்றலை அதிகரித்து சுறுசுறுப்புடன் செயல்படுங்கள்.
 
அறிவியல் ரீதியாக தோப்புக்கரணம் போடுவதாலும், நெற்றியில் குட்டிக் கொள்வதாலும் நம் உடலில் உள்ள "சுஷூம்னா" எனும் நாடி தட்டி  எழுப்பப்படுகிறது. இதனால் மன எழுச்சியும், சுறுசுறுப்பும் உண்டாகிறது குறிப்பிடத்தக்கது.
 
தோப்புகரணம் போடும்போது உடலில் ஏற்படும் மாற்றங்கங்களை ஆராய்ந்த அமெரிக்க நிபுணர்கள், இந்த எளிய உடற்பயிற்சியின் மூலம் மூளையின் நியூரான் செல்கள் புத்துணர்ச்சி அடைகின்றன என்பதை கண்டு பிடித்துள்ளனர்.
 
தோப்புகரணம் போடுவதால் காதுகளின் முக்கிய அக்குபஞ்சர் புள்ளிகளை அழுத்தி பிடிப்பதினால் மூளையில் முக்கிய மாற்றங்கள் நிகழ்கின்றன. இதனால் மூளை புத்துணர்ச்சியுடன் செயல்பட ஆரம்பிக்கின்றன.