வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

ஒருவன் இறந்த பின்பு அவனுடைய ஆன்மா எங்கு இருக்கும்?

சாதாரணமாக மனிதன் இறக்கும் வரை அவன் மனம் நிறைய விஷயங்களைக் கற்பனை செய்து வைத்திருக்கும். ஆன்மாவுக்கு உயிர் இருக்கிறது என்று சொல்லும் மனிதனுக்கு அவன் இறந்த பின்பு அவனுடைய ஆன்மா எப்படி இருக்கும்? எங்கெல்லாம் பயணம் செய்ய  முடியும் என்று கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. அது தொடர்பாக உண்மை தான் என்ன தெரியுமா?
மனிதர்கள் உயிர் வாழும் போது மட்டுமல்ல அவர்கள் இற்நத பின்பும் கூட மனித உடல்கள் தான் இறக்கின்றனவே ஒழிய ஆன்மாக்கள்  அழிவதில்லை. ஆன்மாக்களுக்கு உயிர் உண்டு என்று தான் கூறப்படுகிறது. அப்படி உயிரோடு இருக்கும் ஆன்மா உடல் இறந்த பின் என்ன  தான் செய்கிறது.
ஒரு மனிதன் இறந்த பின் முதல் ஒன்பது நாட்கள் அவர்கள் வாழ்ந்த இடத்துக்கு மிக அருகிலேயே ஆன்மாக்கள் வலம் வந்து கொண்டிருக்கும்.  அதிலும் குறிப்பாக முதல் மூன்று நாட்கள் நீரிலும் நான்காவது நாள் முதல் ஆறாம் நாள் வரையிலும் நெருப்பிலும் ஏழாம் நாள் முதல்  ஒன்பதாம் நாட்கள் வரையில் ஆகாயத்திலும் ஆன்மாக்கள் நிலவும் என கூறப்படுகிறது.
 
உயிர் என்பது உடலின் இயக்கத் தன்மையை குறிப்பது. உடலில் எந்தவொரு இயக்கமும் நடைபெறவில்லை என்றால் அங்கே உயிர் என்பது இல்லை என அர்த்தம். உடலில் இயக்கம் நின்றுவிட்டாலும் கூட, ஆன்மாவாகிய நினைவு சில கணங்கள் நிலைத்திருக்கும். உடலின்  இயக்கமற்ற தன்மையை தான் நாம் மரணம்/மரணித்த நிலை என்கிறோம். உடலிலிருந்து இயக்கமும், ஒட்டுமொத்த நினைவும் பிரிந்தால் தான்  அது முழுமையான மரணம். இருப்பினும் மரணம் என்பது வெறும் உடலுக்கு மட்டும் தான், ஆன்மாவிற்கு அல்ல. ஒரு மனிதன் இறந்த  பின்னும் அவனது ஆன்மாவாகிய ஒட்டுமொத்த நினைவுகளும் மீண்டும் இந்த பிரபஞ்சத்திலயே கலக்கிறது.
 
இதனை தான் யாராவது ஒருவர் இறந்துவிட்டால், “அன்பான அந்த நல்லாத்மா எங்கிருந்து வந்ததோ அங்கேயே சென்று சேர்ந்துவிட்டது”  என்பார்கள்.