தியானம் செய்யும்போது பின்பற்றவேண்டிய சில விஷயங்கள்!!
Updated: புதன், 21 ஆகஸ்ட் 2019 (13:07 IST)
* தியானம் செய்வதற்கான பொருத்தமான இடத்தையும் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். அமைதியான சூழ்நிலையில் தியானத்திற்கான வசதியுடன் அவ்விடம் இருக்க வேண்டும். பொதுவாக, சத்தம் குறைந்த இடமாக இருக்க வேண்டும்.
* தியானம் செய்யும் போது வயிறு காலியாக இருக்கவேண்டும். சாப்பிட்டு விட்டு தியானம் செய்தால் சில சமயம் தூங்கி விடுவீர்கள். அப்படியே சாப்பிட்டாலும், இரண்டு மணி நேரம் கழித்து தியானம் செய்யலாம
* தியானம் செய்ய ஆரம்பிக்கும் முன் லூசான உடைகளை அணிந்து கொள்ள வேண்டும். உட்கார்ந்து தியானம் செய்ய ஒரு குட்டிப் பாயை விரித்துக் கொள்ள வேண்டும். சம்மணம் போட்டு உட்கார்ந்து, முழங்கால்களின் மேல் கைகளை வைத்துக் கொள்ள வேண்டும். முதுகெலும்பு நேராக இருக்குமாறு உட்கார்ந்து, கழுத்தை ரிலாக்ஸ் செய்து கொள்ள வேண்டும். பின், கண்களை மூடி ஓரிரு மூச்சுக்களை மூக்கு மூலம் மட்டும் இழுத்து விட வேண்டும்
* தியானத்தில் அமரும்போது அதில் மட்டுமே உங்கள் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும். மூடிய கண்களை எந்தக் காரணத்தைக் கொண்டும் தேவையில்லாமல் திறக்க வேண்டாம். இரு புருவங்களுக்கும் இடையில் மூடிய பார்வையை நிலை நிறுத்துங்கள். நம்மையும் மீறிய ஒரு ஆற்றலை நினைத்துக் கொண்டு தியானத்தைத் தொடங்கலாம்.