திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

சிவபெருமானுக்கு எந்த மலரை வைத்து வழிபாடு செய்யலாம்...?

சிவபெருமானிற்கு வைத்து வழிபடும் ஒவ்வொரு மலருக்கும் ஒரு அர்த்தமும், பலனும் உள்ளது. இந்த பதிவில் சிவபெருமானுக்கு எந்த மலரை வைத்து வழிபடுவது எந்தெந்த பலன்களை வழங்கும் என்று பார்க்கலாம்.
வில்வ இலைகள்: சிவபெருமானுக்கு மிகவும் பிடித்தது என்றால் அது இந்த முக்கோண வடிவ இலைதான். வில்வ இலைகள் இல்லாமல் செய்யப்படும் சிவ வழிபாடு என்பது பயனற்றது என்று சிவபுராணம் கூறுகிறது. இந்த வில்வ மரம் பிரம்மாவால் உருவாக்கப்பட்டதாக  கூறப்படுகிறது. இந்த மரத்தை லட்சுமியின் வலது கரத்தில் இருந்து உருவாக்கியதாக கூறப்படுகிறது.
 
தும்பை பூ: சிவபெருமானை பிரார்த்திக்கப் பயன்படும் ஒவ்வொரு பூக்களுக்கும் ஒவ்வொரு முக்கியத்துவம் உள்ளது. தும்பை பூவை வைத்து  சிவபெருமானை வழிபடுவது உங்களுக்கு சிறப்பான பலன்களை வழங்கும் என்று கூறப்படுகிறது.
 
செம்பருத்தி பூ: ஆயிரம் செம்பருத்தி மலர்களால் ஆன மாலையை சிவபெருமானுக்கு வைத்து வழிபட்டால் அவர்கள் மரணத்திற்கு பிறகு  கைலாயத்தில் வாழும் வாய்ப்பை பெறுவார்கள் என்று புராணம் கூறுகிறது. இந்த பூவை வைத்து வழிபடுபவர்கள் வாழும்போதே மகிழ்ச்சியான  வாழ்க்கையை வாழ்வார்கள் என்று கூறப்படுகிறது.
ரோஜா: சிவபெருமானை ரோஜா மலர்களை கொண்டு வழிபடுவது அது பத்து குதிரைகளை கொண்ட யாகத்தை செய்வதற்கு சமம் என்று  புராணம் கூறுகிறது. எட்டு ரோஜா மலர்களை கொண்டு சிவபெருமானை வழிபடுபவர்கள் கைலாச பதவியை பெறுவார்கள்.
 
ஊமத்தம் மலர்: ஊமத்தம் மலர் என்பது சோலனேசி குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது வகையான விஷ வெஸ்பெர்டைன் பூக்கும் தாவரங்களின்  ஒரு இனமாகும். இது பேய்களின் ஊதுகுழல் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த மலர்களை வைத்து வழிபடுவது சிவபெருமானின்  ஆசீர்வாதத்தை பெற்றுத்தரும்.
 
எருக்கம் பூ: சிவபெருமானை எருக்கை மலர் கொண்டு வழிபடுபவர்கள் அவர்கள் செய்த பாலியல் குற்றங்களில் இருந்து மன்னிக்கப்படுவார்கள் என்று புராணங்கள் கூறுகிறது. உடல்ரீதியாக மட்டுமின்றி மனரீதியாக செய்த பாவங்களும் இந்த மலரைக் கொண்டு சிவபெருமானை  வழிபடும்போது மன்னிக்கப்படும்.
 
தாமரை பூ: சிவபெருமானிடம் இருந்து செல்வத்தை பெற விரும்புபவர்கள் தாமரை மலரை வைத்து வழிபடலாம். வெள்ளை, பிங்க், நீலம் என பல மலர்களில் தாமரை இருக்கிறது. சிவபெருமானுக்கு வழிபடுவதற்கு நீல தாமரை மிகவும் உகந்ததாகும்.
 
அரளி பூ: சிவபெருமானுக்கு அரளி பூவை பக்தியுடன் வைத்து வழிபடுட்டால் நமது மனதில் இருக்கும் வேண்டுதல்கள் நிறைவேறும் என்று கூறப்படுகிறது. குழந்தை செல்வம் இல்லாதவர்கள் இந்த பூவை வைத்து சிவனை வழிபடலாம். வெள்ளை அரளி மலரை வைத்து  சிவபெருமானை வழிபடுபவர்களுக்கு அழகான மனைவி கிடைப்பார்கள்.