செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

சிவனுடைய அம்சமாக கருதப்படும் ருத்ராட்சத்தின் சிறப்புகள்!!

ருத்ராக்ஷா என்ற வார்த்தையில் இருந்து ருட்ராட்சை அதன் பெயரை பெற்றது. ருத்ராக்ஷா என்பது ‘ருத்ரா’ (சிவன்) மற்றும் ‘அக்ஷா’ (கண்கள்) என்ற வார்த்தைகளில் இருந்து உருவாக்கப்பட்டதாகும். சிவபெருமானின் கண்ணீரில் இருந்து உருவானதே உருத்திராட்சை மரம்  என்று நம்பப்படுகிறது.
சிவனுடைய அம்சமாக கருதப்படுவது ருத்ராட்சம். சிவனின் அங்கத்திலிருந்து விழக்கூடிய வேர்வை என்றெல்லாம் சில புராணங்கள்  சொல்கின்றன. 
 
இந்த ருத்ராட்சை மணிகள் ஒரு முகம் முதல் 21 முகங்கள் வரை கொண்டுள்ளதாகும். இருப்பினும் 1-14 முகங்கள் கொண்ட ருத்ராட்சையை  மட்டுமே மனிதர்கள் அணிகிறார்கள்.
 
ருத்ராட்சை அணிவதால் பல வகையான நோய்கள் குணமடைந்து ஒருவரின் வாழ்க்கையில் நேர்மறையான ஆற்றலை கொண்டு வரும் என்று நம்பப்படுகிறது. இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத் தக்கூடிய சக்தியும், மன அழுத்தத்தை குறைக்கும் சக்தியும் ருத்ராட்சத்திற்கு உண்டு. 
 
ருத்ராட்சத்தை தனியாக அணியாமல் ஏதாவது ஒரு உலோகத்துடன் சேர்த்து அணிந்தால் அது இல்லற வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு  நல்லது.
 
ஆண், பெண் என இருபாலருமே ருத்ராட்சத்தை அணியலாம். பெண்களுக்கு இருக்கக்கூடிய இயல்பான இடர்பாடான நாட்களில் கூட  அணிந்திருக்கலாம்.
 
கிரகங்களிலும் சைவம், வைணவம் என்றெல்லாம் உண்டு. சூரியன், சனி, செவ்வாய், குரு ஆகியவை சிவ கோத்திரம். சனியை இரண்டு  பக்கத்திலும் வைக்கலாம்.
 
செவ்வாய், குரு, சூரியன் ஆகிய மூன்றும் சைவக் கிரகங்கள், சைவக் கடவுள்கள் ஆகும். செவ்வாய் - முருகன், குரு - தட்சிணாமூர்த்தி, சூரியன்  சிவனுக்குரியவர்கள். இந்த ஆதிக்கம் உடையவர்கள் எல்லாம் ருத்ராட்சம் அணிந்தால் பிரம்மாண்டமாக முன்னுக்கு வருவார்கள்.