புதன், 25 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

பல்லி உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன்கள் தெரியுமா...?

பல்லியை பற்றிய ஏராளமான நம்பிக்கைகளும் உள்ளன. அதிலும் பல்லி நம்முடைய உடலில் விழும் இடங்களை வைத்து என்ன நல்லது நடக்கும். என்ன கெட்டது நடக்கும் என்பதை பற்றியெல்லாம் முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர்.

பல்லி தலையில் விழுந்தால் உங்களுக்கு கெட்ட சகுனம் ஏற்படப்போகிறது என்பதை அது குறிக்கிறது. உங்களுக்கு வரக்கூடிய கெட்ட சகுனத்தை பல்லி  தெரிவிப்பதாக நீங்கள் இதை பார்க்க வேண்டும்.
 
நெற்றியில் பல்லி விழுவது நல்ல சகுனமாக பார்க்கப்படுகிறது. உங்களுடைய நெற்றியின் இடது பகுதியில் பல்லி விழுந்தால் உங்களுக்கு புகழை ஏற்படுத்தும்  செயல்கள் நடைபெறும் என அர்த்தம். வலது நெற்றியில் பல்லி விழுந்தால் அது உங்களுக்கு லக்ஷ்மி கடாக்ஷத்தை கொடுக்கும். பணம் செல்வம் உங்களிடம்  மேலோங்கும்.
 
இடது கண் அருகே பல்லி விழுந்தால் அது ஆண்களாக இருந்தால் பல நல்ல விஷயங்கள் நடந்தேறும். அதுவே பெண்களுக்கென்றால் அவர்களின் துணையின்  அன்பு கிடைக்கும்.வலது கண் அருகே பல்லி விழுந்தால் ஆண்களுக்கு அவர்கள் செய்யும் எந்த விஷயத்திலும் தோல்வியே கிடைக்கும். உங்கள் வலது கண் அருகே  பல்லி விழுந்தால் நீங்கள் செய்யும் செயல்களை நன்கு ஆராய்ந்து கவனமாக செய்ய வேண்டும். செய்யும் விஷயங்களில் இருக்கும் குறைகளை கண்டறிந்து அதை  சரிசெய்து தோல்வியை
வெற்றியாக மாற்ற முயலுங்கள்.
 
உங்கள் மேல் உதட்டில் பல்லி விழுந்தால் குடும்பம் மற்றும் உறவுகளில் சில சண்டை சச்சரவுகள் உண்டாகும். கீழ் உதட்டில் பல்லி விழுந்தால் பெண்களுக்கு  அவர்கள் நினைத்த பொருட்கள் கிடைக்கும். ஆண்களுக்கு அதிக அளவில் பணம் வந்து சேரும்.
 
பல்லி உங்களுடைய வலது பாதத்தில் விழுந்தால் உங்களுக்கு சீக்கிரமே நோய்கள் வரப்போகிறது என அர்த்தம். உங்கள் உடலை நீங்கள் கவனமாக பார்த்து கொண்டால் பிரச்சனையின் தீவிரத்தை குறைத்து கொள்ளலாம். இடது பாதத்தில் விழுந்தால் ஒரு சில கெட்ட விஷயங்கள் நடைபெறலாம்.
 
பல்லி உங்கள் மார்பு பகுதியில் விழுந்தால் உங்களுக்கு நன்மையான விஷயங்கள் நடந்தேறும். நீங்கள் நினைத்து வைத்திருக்கும் காரியங்கள் சுபமாக  முடிவடையும்.
 
உங்கள் வலது மணிக்கட்டில் பல்லி விழுந்தால் மோசமான சில செயல்கள் நடந்தேறும். அதுவே உங்களுடைய இடது மணிக்கட்டில் பல்லி விழுந்தால் உங்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் கிடைக்கும்.
 
உங்கள் வலது தோள்பட்டையில் பல்லி விழுந்தால் நீங்கள் செய்யும் எல்லா செயல்களிலும் தொடர்ந்து வெற்றி கிடைக்கும். அதுவே இடது தோள்பட்டையில் பல்லி  விழுந்தால் நீங்கள் நினைத்திராத பல நல்ல செயல்கள் நடந்தேறும்.
 
பல்லி விழுவதென்பது ஒரு கெட்ட சகுனமாகவே பார்க்கப்படுகிறது. பலரும் உடனே அச்சமடைவார்கள். இதில் பெரிதாக நீங்கள் பயப்பட ஒன்றுமில்லை. நல்லதோ,  கெட்டதோ எல்லா பலன்களும் உங்களை நீங்கள் வேகமாக அதற்கு பழக்கப்படுவதற்கே சொல்லப்படுகிறது.