புதன், 25 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

சக்கரத்தாழ்வாரை வழிபடுவதால் கிடைக்கும் அற்புத பலன்கள் !!

மகாவிஷ்ணுவின் கைகளில் பல்வேறு ஆயுதங்கள் இருக்கின்றன. அவர் வலது கையில் இருக்கும் ஆயுதமான ஸ்ரீ சக்கரம் மிகவும் முக்கியமானது. சக்கரம் என்பது  சக்கரத்தாழ்வாரை குறிப்பதாகும். பகைவர்களை அழிக்கும் ஆயுதமாக சக்கரத்தாழ்வார் விளங்குகிறார்.

சக்கரத்தாழ்வாருக்கு ஸ்ரீ சுதர்சனர், ஸ்ரீ சக்கரம், திகிரி, ஸ்ரீ சக்கரம், திருவாழியாழ்வான் எனும் திருநாமங்கள் உண்டு. ஸ்ரீ சுதர்சனர் என்பதற்கு நல்வழி காட்டுபவர் என்று பொருள். சுதர்சனம் மங்களமானது.
 
ஸ்ரீ சுதர்சனர்: ஸ்ரீ சக்கரத்தாழ்வார் முன் புறத்திலும், யோக  நரசிம்மர் பின் புறத்திலும் இருப்பார்கள். 16 கைகள், அவற்றில் சக்கரம், ஈட்டி, கத்தி, கோடரி, அக்னி,  மாவட்டி, தண்டம், சக்தி எனும் 8 ஆயுதங்கள் வலது புறம் இருக்கும். இடது புறம் சங்கு, வில், கண்ணி, கலப்பை, உலக்கை, கதை, வஜ்ரம், சூலம் போன்ற 8  ஆயுதங்களை கையில் ஏந்தியிருப்பார்.
 
சக்கரத்தாழ்வார் சந்நிதியில் நெய்தீபம் ஏற்றி, "ஓம் நமோ பகவதே மகா சுதர்சனாய நம" என்று சொன்னால் கிரக தோஷம் விரைவில் நீங்கி விடும். இவருக்கு உகந்த நாள், வியாழன், சனி. சனிக்கிழமை தரிசிக்க வாழ்வு வளம் பெரும்.
 
சிவப்பு மலர்களால் மாலை சூட்டி, சக்கரத்தாழ்வாரை வழிப்பட்டால் நினைத்த காரியம் ஈடேறி, வெற்றி கிட்டும். அவரை நோக்கி ஓரடி எடுத்துவைத்தால், அவர் உடனே இரண்டடி முன் வைத்து நம் பிரச்சனைகளையும், துன்பங்களையும் தீர்த்து வைப்பார்.