1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. வா‌ஸ்து
Written By Sasikala

மயில் இறகுகளை வீட்டில் வைப்பதால் வாஸ்து தோஷங்கள் நீங்குமா...?

மயில் இறகினை வீட்டுக்கு முன்பு வைத்திருந்தால், வீட்டிற்குள் எதிர்மறை ஆற்றல்கள் நுழைவதைத் தடுக்கும். அப்படி வீட்டின் முன் மயிலிறகை வைத்தால் எதிர்மறை ஆற்றல்கள் நீங்கப் பெறும்.

வீட்டின் முன் வைக்கும் மயிலிறகு ஒற்றையாகவோ கொத்தாகவோ இருக்கலாம். ஆனால் ஒற்றைப்படையில் வைப்பது நல்ல  பலன்களை அளிக்கும். 
 
சிலருக்கு என்ன தான் கஷ்டப்பட்டு சம்பாதித்தாலும் கையில் பணம் தங்கவே தங்காது. அப்படி இருப்பவர்கள் வீட்டில் மயிலிறகை வைத்திருந்தால் செல்வம் பெருகும். பணம், நகை அலமாரியில் ஒரு மயிலிறகை வையுங்கள். செல்வம் அதிகரிக்கவும் நிலைக்கவும் செய்யும்.
 
வீட்டில் இருக்கும் வாஸ்து தோஷங்களைக் கூட மயில் இறகால் நீக்க முடியும். வாஸ்து தோஷத்தை நீக்குவதற்கு எட்டு மயிலிறகைப் பயன்படுத்த வேண்டும். எட்டு மயிலிறகையும் ஒன்றாகச் சேர்த்து ஒரு வெள்ளை நிறக் கயிற்றினால் கட்டி பூஜை அறையில், வைத்து ஓம் சோமாய நமஹ என்ற மந்திரத்தை தினமும் 108  முறை உச்சரித்து வாருங்கள். வாஸ்து தோஷங்கள் அனைத்தும் நீங்கும்.
 
படுக்கை அறையில் மயில் இறகை வைத்திருப்பதன் மூலம் கணவன் மனைவிக்குள் இருக்கும் பிரச்சினைகள் யாவும் நீங்கி, நெருக்கமும் புரிதலும் அதிகரிக்கும்.  திருமணமான தம்பதியர்கள், தங்களின் படுக்கை அறையில் மயில் இறகை வைத்திருப்பதன் மூலம், தம்பதியருக்குள் இருக்கும் பிரச்சனைகள் நீங்கி, அன்யோன்யம்  அதிகரிக்கும்.
 
பலரும் தங்களின் குழந்தைகளின் கல்வியை பற்றி கவலைப்படுவது உண்டு. இதற்கு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் படிக்கும் பாட புத்தகத்தில் மயில் இறகுகளை வைப்பதை விட மயிலிறகை அவர்கள் படிக்கும் ஸ்டடி ரூமில் வைத்து தினமும் மயிலிறகை வணங்கிவிட்டு படிக்கத் தொடங்கினார்கள் என்றால்  அவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.