புதன், 27 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

அற்புத சக்தி படைத்த நிலம்புரண்டி மூலிகை...!!

நிலம்புரண்டி மூலிகை என்பது மனிதர்கள் வாடை(வாசனை) பட்டதும் நிலத்தை குடைந்து கொண்டு உள்ளே சென்றுவிடும். இம்மூலிகை பெரும்பாலும் புதையலை கண்டுபிடிப்பதற்கு உபயோகபடுத்துகிறார்கள்.
இந்த மூலிகை சாதாரணமாக பூமியில் மற்ற செடி கொடிகளுக்கு இடையில் முளைத்திருக்கும், இது மனிதர்களின் வாசனை பட்ட மாத்திரத்தில் மண்ணை கீறிக்கொண்டு உள்ளே  போய்விடும், அதனால்தான் இதற்கு நிலம் புரண்டி என்ற பெயர் வந்துள்ளது.
 
இந்த நிலம்புரண்டி வேரை கண்டுபிடிக்கவேண்டுமெனில், நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும் தேத்தான் கொட்டைகளை வாங்கி கையில் வைத்துக் கொண்டு நடந்தால் தேத்தான் கொட்டையினுடைய வீரியத்தால் நிலத்திற்குள் போகாமல் வெளியே நின்று விடும். மேலும்  மூலிகை இருக்கும் இடம் சென்றால் சல சல என சத்தம் வரும் அதை வைத்து அறியலா. மேலும் தேத்தான் கொட்டைகள் கையில் இருந்து  கீழே நழுவி விடும். 
 
நிலம்புரண்டி மூலிகை சாப நிவர்த்தி: நிலம்புரண்டி மூலிகையை ஞாயிறு. செவ்வாய் மற்றும் வியாழன் கிழமையில் சூர்ய உதயத்திற்கு முன் இடத்தை சுத்தம் செய்து அச்செடிக்கு சாப நிவர்த்தி செய்து மந்திரத்தால் உயிர் கொடுத்து காப்பு கட்டி தூப தீபங்கள் காட்டி  பறிக்கவேண்டும்.