ஞாபக சக்தியை அதிகரிக்க உதவும் வல்லாரை கீரையின் பயன்கள்...!!
வல்லாரைக் கீரையில் நார்ச்சத்து, புரதச்சத்து, இரும்புச் சத்து, சுண்ணாம்புச் சத்து மற்றும் வைட்டமின்கள் மிகுதியாக உள்ளன. வல்லாரையை உணவாகக் கொண்டால், வாயு சம்பந்தமான நோய்கள் அனைத்தும் குணமாகும். நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். பலவகையான விஷக்கடிகள் சரியாகும்.
வல்லாரை இலையில் இருந்து பால் எடுத்து தினமும் அதிகாலையில் 30 மி.லி அளவில் சாப்பிட்டால் குஷ்ட நோய்கள், தோல் நோய்கள், ரத்தத்தில் ஏற்படும் பாதிப்புகள் குணமாகும்.
வல்லாரை, வெள்ளெருக்கு, ஆடுதின்னாப்பாலை மூன்றையும் சம அளவில் எடுத்து அரைத்து நெல்லிக்காய் அளவுக்குத் தொடர்ந்து சாப்பிட்டால், எப்படிப்பட்ட குஷ்ட நோய்களும் குணமாகும்.
அதிகாலையில் நான்கு வல்லாரை இலைகளைப் பறித்து நன்றாக மென்று தின்று அடுத்த நான்கு மணி நேரத்துக்கு எதுவும் சாப்பிடாமல் இருந்தால், எந்தவிதமான அச்சம், பயம் போன்ற பலவகையான மனநோய்களும் விலகும்.
வல்லாரை சாறு, கீழாநெல்லி இலைச்சாறு சம் அலவு எடுத்து கொள்ளவேண்டும். பசும்பால் 100 மி.லி. எடுத்து ஒன்றாகக் கலந்து, அதிகாலையில் சாப்பிட்டு வந்தால், முற்றிய மஞ்சள் காமாலைகூட குணமாகும்.
வல்லாரைச் சாறில் பெருஞ்சீரகத்தை ஊறவைத்து எடுத்து பொடியாக்கி, தினமும் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டால் மாதவிலக்குக் கோளாறுகள் சரியாகும்.
வயிற்றில் கிருமிகள், காக்காய் வலிப்பு, இதய நோய்கள், குஷ்டம், சர்க்கரை நோய், தோல் நோய்கள், மாதவிலக்குக் கோளாறுகள், சிறுநீரகக் கோளாறுகள், உடல் பலவீனம் போன்ற பலவகையான நோய்களைக் குணப்படுத்துவதில் வல்லாரை முன்னிலையில் உள்ளது.