செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

சித்த மருத்துவத்தில் ரத்தத்தை சுத்திகரிப்பு செய்யும் மூலிகைகள்....!

சில வகை காளான்கள் ரத்தத்தில் இது பல்கிப் பெருகுவதால் உடலின் பல இடங்களிலும் அரிப்பு தோன்றும். என்ன மருந்துகள் மேல்பூச்சாக தடவினாலும் பயனளிக்காது. ஏனெனில் இது ரத்தத்திலிருந்து வளர்ந்துகொண்டேயிருப்பதால் வெளிப்புறமாக என்ன மருந்துகள் தடவினாலும்  பயனளிக்காது.
இதற்கு அல்லோபதி மருத்துவத்தில் நிறைய ஆன்ட்டிபயோடிக்குகளைக் கொடுத்து மாதக்கணக்கில் ட்ரீட்மெண்ட் எடுக்க வேண்டி வரும். சித்த மருத்துவத்திலும் அதே போல மாதக் கணக்கில் மருந்துகள் சாப்பிடவேண்டி வரும். 
 
சித்த மருத்துவத்தில் ரத்தத்தை சுத்திகரிப்பு செய்யும் மூலிகைகளாக பரங்கிப்பட்டை, நெல்லிக்காய், வில்வம், வல்லாரை, வெங்காயம், அருகம்புல் போன்ற இயற்கை மூலிகைகள் பயன்படுகின்றன. இவற்றில் ஏதாவது ஒன்றையோ அல்லது இரண்டையோ காலை மாலை  வேளைகளில் உணவுக்கு சற்று முன் உள்ளங்கையில் பாதியளவு எடுத்துக் கொண்டு தண்ணீருடனோ, வெந்நீரிலோ கலந்து வாயில் போட்டு  ஒரு நிமிடம் வைத்திருந்து பின் விழுங்க வேண்டும். இதை தொடர்ந்து செய்து வந்தால் ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு விடும். அதில் வளரும்  கிருமிகள் அழிக்கப்படும்,
 
இதில் அருகம்புல்லும், வில்வமும், குப்பை மேனியும் சாதாரண அரிப்பையும், படர்தாமரை எனப்படும் தோல் வியாதியையும் உடனே போக்கி மிக விரைவில் பலன் தரும். வில்வம் பித்தத்திற்கும் மிகச் சிறந்த மருந்து. காசநோய் மற்றும் இளைப்பு வியாதிக்கும் கூட வில்வத்தை  பயன்படுத்துவார்கள்.
 
இவ்வாறான மூலிகைகளைக் உள்ளே உட்கொண்டு ரத்த சுத்திகரிப்பு செய்து கொண்டே வெளிப்பூச்சு மருந்துகளை அரிப்பு / சிரங்கு ஏற்படும்  இடங்களில் தடவி வந்தால் விரைவில் அரிப்பு குணமாவதோடு, நிரந்தரமாகவும் அரிப்பு நோய் தீரும். இதை சரியாக கடைபிடித்தால் 3 முதல் ஆறு மாதங்களில் அரிப்பு நோயை குணமாக்கமுடியும். உள்ளே சாப்பிடும் மருந்துடன் வெளிப்பூச்சு மருந்தும் உபயோகித்தால் நோயை விரைவில் குணப்படுத்த முடியும்.