1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. ரியோ ஒலிம்பிக்ஸ் 2016
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : திங்கள், 15 ஆகஸ்ட் 2016 (12:17 IST)

ரியோ ஒலிம்பிக் : உசைன் போல்ட் 3ஆவது தங்கம் வென்று சாதனை

ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் 100மீ ஓட்டத்தில் ஜமைக்காவின் உலக சாம்பியன் உசைன் போல்ட் 3ஆவது முறையாகத் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
 

 
ரியோவில் ஆயிரக்கணக்கான ரசிகர்களின் மத்தியில் தளகட போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் 29 வயதான உசைன் போல்ட் 9.81 விநாடிகளில் இலக்கைக் கடந்தார். தன்னுடைய முக்கிய போட்டியாளரான அமெரிக்காவின் ஜஸ்டின் காட்லினை விட முன்னிலை பெற்றார்.
 
அமெரிக்க வீரர் காட்லின் 0.08 விநாடிகள் பின் தங்கி 2ஆவது இடம் பிடித்தார். அதாவது 9.89 விநாடிகளில் இவர் இலக்கை கடந்தார். கனடாவின் ஆந்த்ரே டி கிராஸ் 9.91 விநாடிகளில் இலக்கைக் கடந்து வெண்கலம் வென்றார்.
 
இதற்கு முன்னதாக 2008 பெய்ஜிங் மற்றும் 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் நிகழ்த்தியதை அடுத்து 3ஆவது முறையாக தற்போது ரியோவிலும் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ள்னார்.