Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உண்ணாவிரதம் என்னும் ஆயுதம்; காந்தியடிகள்

Updated: புதன், 28 பிப்ரவரி 2018 (18:09 IST)
 
அதிக பலனுள்ள சில மருந்துகளைப் போல உண்ணாவிரதமும் அபூர்வமான சந்தர்ப்பங்களிலும், அதில் திறமையுடைவர்களின் மேற்பார்வையிலும் தான்  உபயோகிக்கக் கூடியதாகும்.
 
உண்ணாவிரதத்தை உபயோகிக்கும் வித்தையில் திறமை உள்ளவன் உபயோகித்தாலன்றி அது பலாத்காரமாகவே ஆகிவிடக்கூடும்.
 
ஆண்டவன் அருளால் ஏற்படாத உண்ணாவிரதங்கள் அனைத்தும் பயனற்ற வெறும் பட்டினியைவிடக் கூடக் கேவலமானதே ஆகும்.
 
உண்ணாவிரதத்தால் ஏதேனும் நன்மை ஏற்படக் கூடியதாயிருந்தாலும், அடிக்கடி நிகழ்த்தி வந்தால் எந்த நன்மையும் ஏற்படாமல் போகும். இறுதியில் ஏளனமே மிச்சமாகும்.

அடுத்த கட்டுரையில்
Show comments