திங்கள், 27 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 28 அக்டோபர் 2018 (16:33 IST)

தமிழகத்தின் முதல் ஐயப்பன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் - விடியோ

கரூர் மாவட்டம், இலாலாபேட்டையை அடுத்த அருகே கருப்பத்துார் காவிரி ஆற்று கரையில் அமைந்துள்ள ஐயப்பன் கோவிலானது தமிழ்நாட்டில் முதலாவதாக அமைந்த ஐயப்பன் கோவிலாகும். 

 
1965ம் ஆண்டில் ஸ்ரீலஸ்ரீ விமோசனாநந்த குருமகராஜ் அவர்களால் நிர்மாணிக்கபட்ட இத்திருகோவிலில் கடந்த 24ந்தேதி முதல் தொடர்ந்து யாகங்கள் பூஜைகள், தீபாரதனைகள் நடைபெற்றது. வேதமந்திரங்கள் முழங்க, இன்று காலை கோயில் கும்பத்திற்கு புனித காவிரி நீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
 
இந்நிகழ்ச்சியை காண, கரூர் மாவட்டம் மட்டுமில்லாது, திருச்சி, ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு வந்து மஹா கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு, கும்பாபிஷேக தீர்த்த நீரைப்பெற்று அருள்மிகு சுவாமி ஐயப்பனை வழிபட்டனர். மேலும், பாதுகாப்பு பணிக்காக, இலாலாபேட்டை மற்றும் குளித்தலை போலீஸார் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்தனர்.
- சி. ஆனந்தகுமார்