வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 23 டிசம்பர் 2022 (11:18 IST)

சனியிடமிருந்து காக்கும் சக்தி கொண்ட அனுமன்! அனுமன் ஜெயந்தி விரதம்!

Hanuman Tail
ராம அவதாரத்தில் வந்த விஷ்ணு பெருமாளுக்கு உதவ சிவபெருமான் அனுமனாக அவதரித்ததாக புராணக்கதை கூறுகிறது. அனுமன் பிறந்தநாளே அனுமன் ஜெயந்தி ஆகும்.

மார்கழி மாதம், அமாவாசையில் மூலநட்சத்திரம் கூடிவரும் நாளில் கேரளா, தமிழ்நாட்டில் ‘அனுமன் ஜெயந்தி’ கொண்டாடப்படுகிறது.

அனுமன் ஜெயந்தி அன்று விடியற்காலையிலேயே எழுந்து குளித்து, ராம நாமம் துதித்து அனுமனை வழிபட்டு விரதம் தொடங்க வேண்டும்.

விரத சமயத்தில் துளசி நீரை மட்டும் அருந்திக் விரதம் மேற்கொள்ளலாம். மதியம் உணவு எடுத்துக் கொள்ளலாம்.

 ‘ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே, வாயுபுத்ராய தீமஹி, தந்தோ ஹனுமன் ப்ரசோதயாத்’ என்ற ஆஞ்சநேய மந்திரத்தை தொடர்ந்து உச்சரிப்பதன் மூலம் சகல கஷ்டங்களில் இருந்தும் மீளலாம்

அனுமன் ஜெயந்தியன்று அவருக்கு விருப்பமான லட்டு, பூந்தி மற்றும் துளசி, வெற்றிலை வைத்து படைக்க வேண்டும்.

சனி பகவானை வெற்றிக் கொண்ட வீர ஆஞ்சநேயரை அனுமன் ஜெயந்தியில் வழிபடுவதால் சனியின் தோஷங்களிலிருந்து பாதுகாப்பை பெறலாம்.

விரதம் முடித்து மாலை வேளையில் அனுமன் கோவிலுக்கு சென்று வழிபடுவதும் துளசி மாலை, வடை மாலை அணிவிப்பதும் நல்ல பலன்களை தரும்

அனுமன் ஜெயந்தியில் 101 அல்லது 1001 என்ற படையில் ‘ஸ்ரீராமஜெயம்’ எழுதலாம். அதை சீட்டு மாலையாக ஆஞ்சநேயருக்கு அணிவிப்பதும் பிரசித்தம்.