புதன், 1 பிப்ரவரி 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified திங்கள், 28 நவம்பர் 2022 (10:07 IST)

10 நாட்களில் 52 கோடி வசூல்! கலகலக்கும் சபரிமலை யாத்திரை!

சபரிமலை ஐயப்பன் கோவில் யாத்திரை சீசன் தொடங்கியுள்ள நிலையில் 10 நாட்களில் கிடைத்த வருமானம் தொடர்பான விவரங்கள் வெளியாகியுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜைகளுக்காக திறக்கப்பட்டுள்ள நிலையில் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அலைமோதுகிறது. கார்த்திகை மாதத்தில் ஐயப்பன் கோவிலுக்கு விரதமிருந்து, இருமுடி கட்டி பலரும் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் சபரிமலை நடை திறக்கப்பட்ட கடந்த 10 நாட்களில் 52.55 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. கடந்த ஆண்டில் கொரோனா காரணமாக பக்தர்கள் குறைவாகவே வந்ததால் 9.99 கோடியே வசூலாகி இருந்தது. மேலும் அரவணை பிரசாதம் நாள் ஒன்றுக்கு இரண்டரை லட்சம் கண்டெய்னர்கள் விற்பனையாகி வருவதாக தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.

கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் 1.75 லட்சம் பக்தர்கள் ஐயப்ப தரிசனம் செய்துள்ளதாகவும், இதுவரை முன்பதிவு மற்றும் உடனடி முன்பதிவு சேர்ந்து 10 லட்சத்தை தொட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Edit By Prasanth.K