திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 28 நவம்பர் 2022 (08:58 IST)

திருப்பரங்குன்றத்தில் தீபத்திருவிழா; தேரோட்டம்! – இன்று கொடியேற்றம்!

Tiruparangundram
திருப்பரங்குன்றத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் கார்த்திகை தீபத்திருவிழாவிற்கான கொடியேற்றம் இன்று தொடங்குகிறது.

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபத்திருவிழா தொடங்கி 10 நாட்கள் கோலாகலமாக நடைபெற உள்ளது. இன்று தொடங்கி டிசம்பர் 7 வரை நடைபெறும் இந்த திருவிழாவில் பல்வேறு சிறப்பு நிகழ்வுகள், பூஜைகள் நடைபெற உள்ளன.

இன்று மதியம் 12.15 மணிக்கு மேல் திருவிழாவுக்கான கொடியேற்றம் நடைபெற உள்ளது. திருவிழா நாட்களில் தினமும் காலை தங்க சப்பரத்திலும், இரவில் வெள்ளி பூத வாகனம், மயில் வாகனம், குதிரை வாகனம் என பல வகை வாகனங்களிலும் முருகன், தெய்வானை சகிதமாக எழுந்தருள்வார்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக டிசம்பர் 5ம் தேதி ஆறுகால் மண்டபத்தில் பட்டாபிஷேகமும், 6ம் தேதி சிறிய தேரோட்டமும், மாலை மலையில் மகாதீபமும் ஏற்றப்படுகிறது. நிறைவு விழாவாக 7ம் தேதி தீர்த்த உற்சவம் நடைபெறுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக தேரோட்டத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில் தற்போது அதிகமானோர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.