1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated: வெள்ளி, 2 டிசம்பர் 2022 (09:35 IST)

திருவண்ணாமலையில் மலையேற அனுமதி! ஆனா கொஞ்சம் பேருக்குதான்!

திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை அன்று பக்தர்கள் மலையேற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 6ம் தேதி கார்த்திகை தீப விழா கொண்டாடப்பட உள்ளது. அன்று திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்படும் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான மக்கள் திருவண்ணாமலைக்கு தரிசனத்திற்கு வருவது வழக்கமாக உள்ளது.

இந்நிலையில் கூட்ட நெரிசலை தவிர்க்க குறைந்த அளவிலான பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி டிசம்பர் 6ம் தேதி தீபத்திருவிழாவின்போது மதியம் 2 மணி வரை மட்டும் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள்.

மொத்தம் 2,500 பயணிகள் மட்டுமே மலையேற அனுமதிக்கப்படுவார்கள். காலை 6 மணி முதல் இதற்கான டோக்கன்கள் விநியோகம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.

Edit By Prasanth.K