செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 8 செப்டம்பர் 2020 (08:29 IST)

நான் நடிகன் அல்ல என்னை விளம்பரம் தேட.... ஈபிஎஸ் தடாலடி!

கண்களை தானம் செய்தேன் விளம்பரத்திற்காக அல்ல என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். 
 
தேசிய கண்தான தினத்தையொட்டி கண் தானம் செய்வதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கண் தானம் செய்வதற்கான படிவத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட்டு கண் தானத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கையாக இதை செய்வதாக அறிவித்தார். 
 
இதனையடுத்து திருவள்ளூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கை காரணமாக கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. 
 
முன்னதாக, கண்தானத்தை ஊக்குவிக்கும் வகையில் தான் நான் எனது கண்களை தானம் செய்தேன் விளம்பரத்திற்காக அல்ல.  விளம்பரம் தேட நான் நடிகன் அல்ல நான் ஒரு விவசாயி என்று தெரிவித்தார்.