நிச்சயமான பெண்ணை காப்பாற்ற நினைத்து பெற்றோரை இழந்த இளைஞர்!

hang
நிச்சயமான பெண்ணை காப்பாற்ற நினைத்து பெற்றோரை இழந்த இளைஞர்!
siva| Last Updated: வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (19:38 IST)
நிச்சயமான பெண்ணை காப்பாற்ற நினைத்து பெற்றோரை இழந்த இளைஞர் ஒருவரின் பரிதாபமான நிலை குறித்த தகவல் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள ஒரு இளைஞருக்கும் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. நிச்சயக்கப்பட்ட பெண் வேறு ஒருவரை காதலிப்பதாக அறிந்த அந்த இளைஞர் தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்ய மறுத்து உள்ளதாக தெரிகிறது. பெற்றோரிடம் அவர் உண்மையையும் கூறவில்லை.

இந்த நிலையில் நிச்சயிக்கப்பட்ட திருமணத்திற்கு மகன் மறுப்பு தெரிவித்ததால் விரக்தி அடைந்த அந்த இளைஞரின் தாய் தந்தை ஆகிய இருவரும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டனர். இதனால் அந்த இளைஞர் தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை காப்பாற்ற நினைத்து பெற்றோரை இழந்துள்ளது பரிதாபமாக உள்ளது.இதில் மேலும் படிக்கவும் :