செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 21 ஏப்ரல் 2021 (23:43 IST)

மகளுடன் தற்கொலை செய்து கொண்ட தாய்...அதிர்ச்சி சம்பவம்

தென்காசி மாவட்டம் கடையம் அருகேயுள்ள பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண் தனது குழந்தையுடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் பால்வண்னநாதபுரத்தில் வசித்து வந்தவர் லட்சுமி. இவருக்கு ஒருமாதமாக மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று காலை தனது மகளுடன் சென்று தோரணமலை முருகன் கோவிலுக்குச் சென்றுவிட்டு வீடுதிரும்பவில்லை எனத் தெரிகிறது.

இதனால் அவாது கண்வர்  தேடிப்பார்த்தும் ஊரில் மனைவியும் குழந்தையும் இல்லாததால் மேலும் குழப்பம் அடைந்தார். பின்னர் மலையில் உச்சியிலிருந்து கீழே விழுந்து  இரு சடலங்கள் கிடப்பது தெரியவந்தது. அது லட்சுமி அவரது மகளுடன் இணைந்து தற்கொலை முடிவு எடுத்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.