வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: புதன், 17 ஜூலை 2024 (15:59 IST)

பள்ளிச் சிறுமியை கடத்திச் சென்ற இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது!

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர்  பகுதியைச் சேர்ந்த (15 வயது) சிறுமி அங்கு உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
 
இந்நிலையில் கடந்த மாதம் பள்ளிக்குச் சென்ற அந்த சிறுமி காணவில்லை என அச்சிறுமியின் பெற்றோர் குன்னம் போலீசில் புகார் செய்தனர். 
 
அதன் பேரில் குன்னம் போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு பிறகு ஒரு இளைஞர் அந்த சிறுமியை அவரது வீட்டில் அருகில்  விட்டுவிட்டு அந்த இளைஞர் தலைமறைவானார். என கூறப்படுகிறது 
 
சிறுமியின் பெற்றோர் இது குறித்து மங்களமேடு காவல் நிலையத்தில் புகார் செய்தனர். 
 
பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஹேமலதா விசாரணை நடத்தி வந்தார் .
 
மேலும் இது குறித்து போலீசார் விசாரணையில் குன்னம் அருகே உள்ள பெருமத்தூர் குடிக்காடு  கிராமத்தைச் சேர்ந்த கதிரவன் மகன் ஜீவா (21) என்பதும் இவர் கல்லூரி படிப்பை இடையில் நிறுத்தி விட்டு ஊரை சுற்றி வருபவர் என்றும் வேப்பூரில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு வரும்போது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டு ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்திச் சென்றார் என்பதும் தெரிய வந்தது.
 
பின்னர் போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று ஜீவாவை போக்சோ வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு பின்னர் பெரம்பலூர் சிறையில் அடைத்தனர்.