Daily Horoscope
✕

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் டி செல்வராஜ் மறைவு - கலைஞர்கள் இரங்கல் !

Updated: சனி, 21 டிசம்பர் 2019 (11:53 IST)
தமிழின் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவரான டி செல்வராஜ் நேற்று மாலை அவரது இல்லத்தில் மறைந்தார்.
 

திருநெல்வேலியில் பிறந்த எழுத்தாளர் டி செல்வராஜ் வழக்கறிஞராக பணியாற்றியவர். இவர் மூலதனம் மலரும் சருகும் அக்னிகுண்டம் தேநீர் மற்றும் தோல் ஆகிய நாவல்களை எழுதியுள்ளார். இவரது தேனீர் நாவல் இயக்குனர் ஜெயபாரதி அவர்களால் ஊமை ஜனங்கள் என்ற பெயரில் படமாக்கப்பட்டது. இவரது தோல் நாவலுக்காக இவருக்கு சாகித்ய அகாடமி விருதும் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தை தோற்றுவித்தவர்களுள் இவரும் ஒருவர்.  வயது மூப்பு காரணமாக சில ஆண்டுகளாக ஓய்வில் இருந்த இவர் நேற்று மாலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 81.  அவரது மறைவிற்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

எல்லாம் காட்டு

பிளிப்கார்ட்டின் தலைமை நிர்வாக அதிகாரி கல்யாண் கிருஷ்ணமூர்த்தி திடீர் விலகல்.. என்ன காரணம்?

பெண் கலெக்டருக்கு ஆபாச மெசேஜ்!. யார் இந்த அருள் விக்னேஷ்?...

தீபம் ஏற்றாததற்கு கோவில் நிர்வாகம் தான் காரனம்.. நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்ட தமிழக அரசு...

எம்.எல்.ஏக்களை தூக்கிய விஜய்.. பழிக்கு பழி தீர்த்த பழனிச்சாமி!.. நடந்தது என்ன?..

உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் கரப்பான்பூச்சி கட்சி போட்டியா? அபிஜீத் தீப்கே விளக்கம்...

அடுத்த கட்டுரையில்
Show comments