செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Anandakumar
Last Modified: செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (00:40 IST)

3 வயது குழந்தைகள் தமிழ் வருடங்கள் 60 ஐயும் 1 நிமிடம் 4 வினாடிகள் கூறி உலக சாதனை

karur
கரூரில் 3 வயது குழந்தைகள் தமிழ் வருடங்கள் 60 ஐயும் 1 நிமிடம் 4 வினாடிகள் கூறி உலக சாதனை நிகழ்த்தி சாதனை | ஏற்கனவே 1 நிமிடம் 46 விநாடிகள் சாதனை செய்தவர்களின் சாதனை முறியடித்த சிறுவர் சிறுமிகள்.
 
கரூர் சின்ன ஆண்டாங்கோயில் சாலையில் உள்ள ஆசிரியர் காலனியில் அமைந்துள்ள கிரீன் ஹுட் மழலையர் பள்ளியில் பயில்பவர்கள் 3 வயது நிரம்பிய மாணவர்கள் ஹாசனி, பவின் விசாகன் இவர்கள் இன்று காந்திகிராமம் பகுதியில் உள்ள தனியார் மஹாலில், ஜெட்லி புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்டு பதிவினை முறியடித்து இவர்களது பதிவு பதிவாகியுள்ளது. என்னவென்றால் இருவரும் தமிழ் வருடங்கள் 1 நிமிடம் 4 விநாடிகள் கூறி சாதனையை முறியடித்துள்ளனர். ஏற்கனவே, இந்த தமிழ் வருடங்களை 1 நிமிடம் 45 விநாடிகள் மட்டுமே சாதனை செய்தவர்களின் சாதனையை இவர்கள் முறியடித்து தனி வேர்ல்டு ரெக்கார்டினை பதிவு செய்துள்ளனர். கரூர் கிரீன் ஹூட் மழலையர் பள்ளியின் தளாளர் சாந்தி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் நடுநிலையாளர்கள் என்று ஏராளமானோர் கலந்து கொண்டு சாதனை பதிவு நிகழ்த்திய சிறுவர் சிறுமிகளை பாராட்டினர்.