1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 13 டிசம்பர் 2017 (17:15 IST)

தஷ்வந்தை செருப்பால் அடித்த பெண்கள் - நீதிமன்றத்தில் பரபரப்பு

சிறுமி ஹாசினி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தஷ்வந்தை நீதிமன்ற வளாகத்தில் பெண்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


 
சிறுமி ஹாசினி கொலை வழக்கில் ஜாமீன் பெற்று வெளியே வந்த தஷ்வந்த், தனது தாயை கொலை செய்து விட்டு அவரின் நகை மற்றும் வீட்டிலிருந்த நகையை எடுத்துக்கொண்டு மும்பை தப்பி சென்றார். அவரை அங்கு கையும் களவுமாக தமிழக போலீசார் பிடித்தனர். 
 
ஆனால், ஒரு போலீஸ் அதிகாரியை தாக்கிவிட்டு அவர் தப்பி சென்றார். அதன்பின் ஒருவழியாக அவரை பிடித்த தமிழக போலீசார் அவரை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தினர். 
 
அவரை நீதிமன்ற வளாகத்திற்கு போலீசார் அழைத்து வந்த போது, மாதர் சங்கத்தினர் மற்றும் அங்கிருந்த பெண்கள் அவரை சூழ்ந்துகொண்டு சராமாரியாக தாக்குதல் நடத்தினர். சிலர் அவர் மீது செருப்புகளை வீசினர். அவர்களிடமிருந்து அவரை மீட்டு போலீசார் உள்ளே அழைத்து சென்றனர். 
 
இந்த விவகாரம் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.