புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 24 செப்டம்பர் 2019 (09:04 IST)

மனைவியுடன் பிரச்சனை… மாமியார் மேல் கோபம் – கோபத்தில் மருமகன் செய்த கொடூரம்

சேலத்தில் தன் மனைவியை தன்னுடன் வாழ அனுமதிக்காத மாமியாரை மருமகன் கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியைச் சேர்ந்தவர் பேபி எனும் பெண்மணி. இவருக்கு தீபா என்ற மகள் உள்ளார். கணவர் இல்லாமல் வாழ்ந்த பேபி,  தன் மகள் தீபாவுக்கு வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கணபதி என்பவரோடு சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடத்தி வைத்துள்ளார். இத்தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ஆனால் அடிக்கடி தம்பதிகளுக்குள் சண்டை வந்ததால் தீபா கோபித்துக்கொண்டு குழந்தைகளோடு தன் தாய்  பேபி வீட்டுக்கு சென்றுள்ளார்.

இதனையடுத்து சேலம் சென்று தீபாவை சமாதானப்படுத்தி தன்னுடன் அழைத்து வருவதற்காக கணபதி சென்றுள்ளார். ஆனால் தீபா அவரோடு செல்ல மறுத்துள்ளார். மேலும் பேபியும் தனது மகளைக் கணவனோடு அனுப்ப முடியாது எனக் கூறியுள்ளார். இதனால் தன் மனைவி தன்னோடு வாழ மறுப்பதற்கு தனது மாமியார்தான் காரணம் என்ற முடிவுக்கு வந்துள்ளார் கணபதி. அதனால் பேபியைப் பழிவாங்க தக்க சமயம் பார்த்து வீட்டில் யாரும் இல்லாத போது வந்து அவர் கழுத்தை நெறித்துக் கொன்றுள்ளார். அவர் இறந்ததை உறுதி செய்த பின் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

இதையடுத்து தீபா போலிஸுக்குத் தகவல் தெரிவிக்க தலைமறைவாகியுள்ள கணபதியை தேடி வருகின்றனர்.