மைதானத்தை சுற்றிவந்த பெண் : மயங்கி விழுந்த மர்மம் என்ன..?
கிழக்கு தாம்பரம் ஆனந்தாபுரம் பகுதியை சேர்ந்தவர் லூயிஸ் தேவராஜ் இவரது மகள் மகிமா (18) தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார்.
கல்லூரியில் படிக்கும் அனைத்து மாணவ - மாணவிகள் கட்டாயம் விளையாட வேண்டும் என கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது.
ஆனால் நேற்று மாலையில் கல்லூரியில் கைப்பந்து விளையாட்டு போட்டி நடைபெற்றுள்ளது. ஆனால் மகிமாவுக்கு உடல் நிலை சரியில்லாததால் அதில் பங்கேற்க முடியாது என்று கூறியிருக்கிறார்.
இருப்பினும் அவரைக் கட்டாயப்படுத்தி கைப்பந்து விளையாட வைத்து உள்ளனர். அவர் மைதானத்தை சுற்றி வந்து பயிற்சியில் ஈடுபட்ட சிலநிமிஷத்திலேயே அவருக்கு மூச்சு திணரல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சக மாணவியர் மகிமாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து விட்டார்.
இதனையடுத்து சம மாணவ - மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் குறிப்பாக கல்லூரியில் யாரையும் இனிமேல் விளையாடுமாறு வற்புறுத்தக் கூடாது என கோஷம் எழுப்பி மகிமாவுக்கு அஞ்சலி செலுத்தினர்.
மகிமா உரியிழந்ததால் கல்லூரியில் அனைவரும் சோகத்துடன் காணப்பட்டனர்.