திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 11 டிசம்பர் 2018 (17:30 IST)

மிசோரமில் வாக்கு எண்ணிக்கை நிறைவு: காலியான காங்கிரஸ்

கடந்த சில தினங்களுக்கு முன்னர் ராஜஸ்தான், மத்திடபிரதேசம், மிசோரம், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெற்று இன்று வாக்கு எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன.

 
தெலங்கானாவில் சந்திரசேகர ராவ் ஆட்சி அமைக்க உள்ளார். மீதமுள்ள 4 மாநிலங்களில் பாஜக்வை விட காங்கிரஸ் கை ஓங்கியே இருந்தது. தற்போது மிசோரமில் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்துள்ளது. 
 
மொத்தமுள்ள 40 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 5 இடங்களில் கைப்பற்றியுள்ளது. மாநில கட்சியான மிசோரம் தேசிய முன்னணி 25 இடத்தையும், பாஜக 1 இடத்தையும், 8 சுயேட்சை வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர். 
 
ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் ஆட்சி பறிபோகியுள்ளது. தேர்தல் முடிவுகள்படி மிசோரம் தேசிய கட்சி ஆட்சி அமைக்க உள்ளது.