திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 11 டிசம்பர் 2018 (17:46 IST)

ரஜினி பிறந்தநாள் ஸ்பெஷல் ! - கொண்டாட துவங்கிய ரசிகர்கள்!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பொங்கலுக்கு வெளிவரவிருக்கும் படம் பேட்ட. 


 
 
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா, சசிகுமார், நவாஸுதீன் சித்திக் உள்ளிட்ட ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள பேட்ட படம்  மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே வெளியாக உள்ளது. 
 
படத்தில் நடித்துள்ள நட்சத்திரங்களையும் திரையில் காண ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் உள்ளனர். அது குறையாதவாறு, படக்குழுவினரும் அடுத்தடுத்து அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். 

அந்த வகையில் பேட்ட படத்தின் ஆடியோ சமீபத்தில்  பிரம்மாண்டமாக வெளியிடப்பட்ட நிலையில், அவரது பிறந்தநாளை முன்னிட்டு, படத்தின் டீசர் நாளை  வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிச்சர் தெரிவித்துள்ளது.
 
படத்தின் ஒட்டுமொத்த பாடல்கள் மற்றும் தீம் இசை 9-ம் தேதி வெளியாகி இணையத்தில் அனைவரையும் ஈர்த்து வருகிறது. தற்போது இப்படத்தின் டீஸர் டிசம்பர் 12-ம் தேதியான சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்தநாளான நாளை காலை 11 மணியளவில் வெளியாகிறது. நிச்சயமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என கூறலாம்.
 
இந்த தகவலை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துளளர். சன் பிக்சர்ஸின் யூடியூப் பக்கத்தில் இந்த டீசர் வெளியிடப்படும்.