திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : புதன், 3 மார்ச் 2021 (18:20 IST)

தேர்தல் வருவதால்.....மதுபான விற்பனை குறைப்பு - தேர்தல் ஆணையம் அதிரடி

ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில், தேர்தல் ஆணையம் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலிலுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் ஏற்கனவே மதுபானக் கடையில் விற்பனை நேரத்தைக் குறைத்து தேர்தல் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ள நிலையில் இன்று மதுபான விற்பனைக்கு கட்டுப்பாட்டுகள் விதித்துள்ளனர்.

அதில் புதுச்சேரி மாநிலத்தில்  தனிநபருக்கு 9 லிட்டர் பீர், 4.5 லிட்டர் பிராந்தி, 4 லிட்டர் சாராயம் விற்க மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.