செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 5 மே 2021 (13:51 IST)

மராத்தியர்களுக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்த உச்சநீதிமன்றம்… வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கு சிக்கல் வருமா?

அதிமுக தலைமையிலான தமிழக அரசு சில மாதங்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் இருக்கும் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு அளித்தது.

ஆனால் இதனால் தென் மாவட்டங்களில் அதிமுக அரசுக்கு எதிரான கண்டனங்கள் எழுந்தன. ஓபிஎஸ் மற்றும் உதயகுமார் உள்ளிட்டவர்கள் இந்த இட ஒதுக்கீடு தற்காலிகமானதுதான் எனக் கூறினர். ஆனால் பாமக நிறுவனர் ராமதாஸ் அதை மறுத்து நிரந்தரமான இட ஒதுக்கீடு எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மராத்தியர்களுக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் 16 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அது சம்மந்தமான வழக்கு ஒன்றில் இன்று உச்ச நீதிமன்றம் எந்த முகாந்திரமும் இல்லை என அந்த இட ஒதுக்கீட்டை ரத்து செய்துள்ளது. இதனால் இதுபோல வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடும்  ரத்து செய்யப்பட்டு விடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.