வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : சனி, 2 மார்ச் 2024 (15:10 IST)

விசிகவுக்கு கேட்ட தொகுதிகள் கிடைக்குமா? ஏமாற்றமா?

திமுக கூட்டணியில் உள்ள விசிக உடனான 2 ஆம் கட்ட  பேச்சுவார்த்தை இன்று நடைபெறவில்லை என தகவல் வெளியாகிறது.
 
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட  தேசிய கட்சிகளும், திமுக, திரிணாமுல், ஆம் ஆத்மி, சமாஜ்வாடி உள்ளிட்ட  மாநில கட்சிகளும் கூட்டணி பற்றியும் தொகுதி பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
 
இந்த   நிலையில், தமிழ் நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்ற கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சிக்கும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சிக்கும் ஏற்கனவே தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
 
இந்த  நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள  மதிமுக, மற்றும் விசிக ஆகிய கட்சிகளுடன்  தொகுதிப் பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
 
அதன்படி, திருமாவளவன் தலைமையிலான விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு  2 தனி தொகுதிகளும்,  1 பொதுத்தொகுதியும் கேட்டப்பட்ட நிலையில்,  திமுக தரப்பில் 2 தொகுதி மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டதால், 2 ஆம் கட்ட  பேச்சுவார்த்தை இன்று நடைபெறவில்லை என தகவல் வெளியாகிறது.