கலெக்டரை வழிமறித்த காட்டு யானை..
நீலகிரியில் கலெக்டரின் காரை காட்டு யானை ஒன்று வழிமறித்ததில் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டம் மசின்குடி ஆதிவாசி கிராமத்தில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் அதனை ஆய்வு செய்ய கலெகடர் இன்னசெண்ட் திவ்யா தனது உதவியாளருடன் காரில் சென்றுக்கொண்டிருந்தார். அவர்களுக்கு பின்னாலும் அதிகாரிகள் காரில் சென்றனர்.
அப்போது வழியில் திடீரென ஒரு காட்டு யானை அவர்களை வழி மறைத்தது. சிறிது நேரம் கழித்து காட்டு யானை நடக்க ஆரம்பித்தது. அதனை பிந்தொடர்ந்து சென்ற வாகனங்கள் சென்றன. அப்போது மீண்டும் திரும்ப நின்றது. பின்பு 30 நிமிடங்கள் கழித்து காட்டு யானை காட்டிற்குள் சென்றது. அதன் பின்னர் அனைத்து வாகனங்களும் சென்றன.