மனைவிக்குக் குடிப்பழக்கத்தை அறிமுகப்படுத்திய கணவன் – பின்பு அதுவே வினையான விபரீதம் !
புதுச்சேரியில் குடி அடிமையான தனது மனைவியைக் கணவர் கண்டித்ததால் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
புதுச்சேரியை சேர்ந்தவர்கள் குருநாதன் மற்றும் தாரா தம்பதியினர். குருநாதன் தன் மனைவிக்குக் குடிப்பழக்கத்தை அறிமுகப்படுத்தி அவரோடு சேர்ந்து குடிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். நீண்டகாலமாக இதுபோல இருவரும் சேர்ந்து குடித்துள்ளனர்.
ஆனால் ஒரு கட்டத்தில் உடல்நிலை தொய்வு காரணமாக குருநாதன் குடிப்பதை நிறுத்தியுள்ளார். ஆனால் தாராவால் குடிப்பழக்கத்தில் இருந்து வெளிவர முடியவில்லை. இதனால் குருநாதன் தன் மனைவியைக் கடுமையாக திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த தாரா கணவர் வீட்டில் இல்லாத நேரமாகப் பார்த்து தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலிஸார் தாராவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.