வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 2 டிசம்பர் 2023 (16:42 IST)

கார் பந்தயத்திற்கு ரூ.240 கோடி செலவிடுவது ஏன்?எடப்பாடி பழனிசாமி

edapadi palanisamy
சென்னையில் வரும் டிசம்பர் 9 மற்றும் 10 தேதி நடைபெறவுள்ள இரவு நேர ஃபார்முலா ரேசிங் சர்க்யூட் ஃபார்முலா 4   பந்தயம் பற்றி முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

‘’சென்னையில் வரும் டிசம்பர் 9 மற்றும் 10 தேதி நடைபெறவுள்ள இரவு நேர ஃபார்முலா ரேசிங் சர்க்யூட் ஃபார்முலா 4 போட்டிகளுக்கான ஏற்பாடுகள்  தீவிரமாக நடந்து வரும் நிலையில்,  இந்தப் போட்டிக்கான டிக்கெட்-ஐ அமைச்சர் உதயநிதி சமீபத்தில் அறிமுகம் செய்தார்.

இந்தியாவிலேயே முதன்முறையாக நடைபெறும் இந்த சிறப்புக்குரிய போட்டியின் மீதான எதிர்பார்ப்பு இளைஞர்களிடையே அதிகரித்துள்ளது.

இந்த நிலையில்,  இந்தக் கார் பந்தயம் பற்றி அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

‘’கார் பந்தயம் நடத்த ரூ.240 கோடி   திமுக அரசு செலவிடுவது ஏன்?  ஒரு நாள் மழைக்கே சென்னை மாநகரம் தத்தளிக்கிறது. மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது. பல்வேறு திட்டங்களுக்கு நிதியில்லாமல் இருக்கும் நிலையில், பந்தயத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.