திங்கள், 18 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : புதன், 19 அக்டோபர் 2016 (13:12 IST)

ஜெயலலிதா ஏன் சிகிச்சைக்காக வெளிநாடு செல்லவில்லை? : இதுதான் காரணமா?

ஜெயலலிதா ஏன் சிகிச்சைக்காக வெளிநாடு செல்லவில்லை? : இதுதான் காரணமா?

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 28 நாட்களாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 


 

 
முதல்வர், கடந்த மாதம் 22ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடன், அப்பல்லோ மருத்துவர்களே அவருக்கு சிகிச்சை அளித்தனர். காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு இருந்ததாக மருத்துவமனை சார்பாக செய்திகள் வெளியிடப்பட்டது. 
 
அதன்பின் மும்பையிலிருந்து மருத்துவர்கள் அப்பல்லோ வந்தனர். பின்னர் லண்டனை சேர்ந்த மருத்துவர் ரிச்சர்ட் தன்னுடைய குழுவுடன் சென்னை வந்து முதல்வருக்கு சிகிச்சை அளித்தார். அதன்பின் எய்ம்ஸ் மருத்துவர்களை மத்திய அரசு அனுப்பி வைத்தது. தற்போது சிங்கப்பூரிலிருந்து பிசியோதெரபி நிபுணர்கள் சென்னை வந்து முதல்வருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
 
முதல்வர் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், கண் திறந்து பார்க்கிறார்.. பேசுகிறார்.. என்றெல்லாம் செய்திகள் வெளியானது. 
 
இதனையடுத்து மத்திய அரசு தரப்பில் இருந்து தமிழக அரசிடம் பேசியதாகவும், வெளிநாட்டுக்கு முதல்வர் ஜெயலலிதாவை கொண்டு சென்று சிகிச்சை அளிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாகவும், தமிழக அரசு ஒப்புதல் அளித்தால் அதற்கான சிறப்பு ஆம்புலன்ஸ் விமானம் ஏற்பாடுகள் செய்ய தயாராக இருப்பதாகவும் கூறியதாக தகவல்கள் வெளிவந்தன. அதேபோல், முதல்வருக்கு சிகிச்சை அளித்து வரும் சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துர்கள், அவரை சிங்கப்பூருக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தால் நல்லது கருத்து தெரிவித்துள்ளதாகவும் தெரிகிறது.
 
வெளிநாடுகளுக்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ள முதல்வருக்கு விருப்பமில்லை. மேலும், இந்த சூழ்நிலையில், அவ்வாறு செல்வது நல்லதல்ல என்று அவரின் ஆஸ்தான ஜோதிடர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனராம். எனவே தமிழக அரசு மற்றும் சசிகலா தரப்பிலிருந்து கிரீன் சிக்னல் கிடைக்கவில்லை என்று தெரிகிறது. எனவே, மத்திய அரசின் ஆலோசனையை அவர்கள் நிராகரித்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.