Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவளித்தது ஏன்?

Written By Sugapriya Prakash
Updated: திங்கள், 16 டிசம்பர் 2019 (11:58 IST)
அதிமுக குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவளித்தது ஏன் என மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். 

 
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்ட மசோதா கடந்த திங்களன்று மக்களவையில் வெற்றிகரமாக நிறைவேறியது. இந்த மசோதாவிற்கு 300 எம்பிக்களுக்கு மேல் ஆதரவும் 80 எம்பிக்கள் மட்டும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து இந்த மசோதா மக்களவையில் வெற்றிகரமாக நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது. 
 
மக்களவையில் வெற்றிகரமாக நிறைவேறிய இந்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. மாநிலங்களவையிலும் பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை இருப்பதால் இந்த மசோதா நிறைவேறி விடும் என்றே கணிக்கப்பட்டது. 
 
அதன்படி இந்த மசோதாவுக்கு ஆதரவாக 117 வாக்குகளும் எதிர்த்து 92 வாக்குகள் பதிவானது. இதனை அடுத்து இந்த மசோதா மாநிலங்களவையிலும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
 
இந்த குடியுரிமை மசோதாவில் இலங்கை தமிழகர்கள் இஸ்லாமியர்கள் இணைக்கப்படாததாலும், மத நல்லினத்திற்கு எதிரானது என தமிழகத்தில் இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. அதோடு அதிமுக இந்த குடியுரிமை மசோதாவ்இற்கு ஆதரவாக வாக்களிக்காமல் இருந்து இருந்தால் இது தோல்வியில் முடிந்திருக்க கூடும். 
 
ஆனால், அதிமுக இதற்கு ஆதரவு தெரிவித்தது ஏன் என மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, பாஜக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சியினரும் மசோதாவை ஆதரிக்க வேண்டிய கட்டாயத்தில்தான் இருந்தனர் என தெரிவித்துள்ளார். 

எல்லாம் காட்டு

எஸ்பிஐ வங்கியில் வேலைவாய்ப்பு.. மாத சம்பளம் ரூ.64,480 வரை... விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்..

3 நாட்களுக்கு முன்பே நீட் வினாத்தாள் கசிந்துவிட்டது.. சிபிஐ விசாரணையில் திடுக்கிடும் தகவல்...

அப்பாவை காணோம்!.. வீட்டுக்கு போய் கேளுங்க!.. ஆதவ் அர்ஜுனா - உதயநிதி வாக்குவாதம்!...

மீண்டும் பாஜகவுடன் கூட்டணி சேரும் முக்கிய கட்சி.. பஞ்சாபிலும் ஆட்சியை பிடித்துவிடுமோ?

வெப்சீரிஸ் பார்த்து மனைவியை கொன்ற கணவன்.. மூன்றே நாளில் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments