வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 13 டிசம்பர் 2019 (06:54 IST)

குடியுரிமை திருத்த சட்டம்: ஜனாதிபதி ஒப்புதல் கிடைத்தாலும் மாநில அரசுகள் நிறைவேற்றுமா?

புதிய குடியுரிமை சட்டத் சட்டத்திருத்தம் சமீபத்தில் பாராளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரண்டு அவைகளிலும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. இதனை அடுத்து இந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்குமாறு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு அனுப்பப்பட்டது. ஜனாதிபதியும் இந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துவிட்டார். இதனையடுத்து இந்த சட்டம் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது 
 
இந்த நிலையில் மாநில அரசுகள் இந்த சட்டத்தை அமல்படுத்த முடியாது என்று கூற வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது. இந்த நிலையில் ஒரு சில மாநில அரசுகள் இந்த சட்டத்தை தங்கள் மாநிலங்களில் அமல்படுத்த முடியாது என்று கூறவிருப்பதாக செய்திகள் வெளிவந்தன.
 
இதனையடுத்து முதல் நபராக பஞ்சாப் மாநில முதல்வர் அம்ரீந்தர் சிங் அவர்கள் தங்கள் மாநிலத்தில் இந்த சட்டத்தை அமல்படுத்த முடியாது என்று அவர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இந்தியாவின் மதச்சார்பின்மை மீதான நேரடி தாக்குதலாக இந்த குடியுரிமை திருத்த சட்டம் இருக்கின்றது. எனவே இந்த சட்டத்தை பஞ்சாப் மாநிலத்தில் அமல்படுத்த முடியாது’என்று அம்மாநில முதல்வர் அம்ரிந்தர் சிங் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
இதே போல் காங்கிரஸ் ஆளும் மற்ற மாநிலங்களிலும் பாஜக கூட்டணியில் இல்லாத ஒரு சில மாநிலங்களிலும் முதல்வர்கள் அறிவிக்க வாய்ப்பு இருப்பதாகவும், எனவே  ஜனாதிபதி ஒப்புதல் அளித்த போதிலும் நாடு முழுவதும் இந்த சட்டம் அமலுக்கு வருமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது