புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வியாழன், 8 அக்டோபர் 2020 (16:40 IST)

இந்த மானஸ்தன் யார் ? புகைப்படத்தைப் பதிவிட்டு …வம்புக்கு இழுத்த உதயநிதி

தமிழகத்தில் உள்ள இருபெரும் திராவிட கட்சிகள் தான் ஐம்பது ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்டு வருகின்றனர்.

இவ்விரு கட்சிகளுக்கும் கருத்து வேறுபாடுகள் அதிகம் என்பதால் அவர்கள் தெரிவிக்கும் கருத்துகள் பெரும் விவாதத்தைக் கிளப்பும்.

இவர்கள் பரஸ்பரம் தங்களின் கேள்விகாளும் விமர்சனங்கள் எழுப்புவதும் வாடிக்கை.
சமீபத்தில் அதிமுகவில் நீடித்து வந்த உட்கட்சிக் குழப்பம் தீர நேற்று ஓபிஎஸ் அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் ஓபிஎஸ் என அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார்.

இந்நிலையில் திமுகவின் இளைஞர் அணி செயலாளரான உதயநிதி எப்போதும் அதிமுகவை வாரி எடுப்பார்.

அந்த வகையில் இன்று தனது டுவிட்டரில் டெட்பாடி போல் விழுந்து கிடக்கும் இந்த மானஸ்தன் யார்? என்று கேள்வி எழிப்பி ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார்.