1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Minister Jayakumar comments on DMK and MK Stalin

தமிழகத்தில் திமுக தேறாது... ஜெயகுமார் விமர்சனம்!

திமுக
திமுக இனி தமிழகத்தில் தேறாது என்பதை மக்கள் நிரூபிப்பார்கள் என அமைச்சர் ஜெயகுமார் விமர்சித்துள்ளார். 
 
சமீபத்தில் திமுக தலைவரும் எதிர்கட்சி தலைவருமான மு.க ஸ்டாலின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் ஒன்று சேர்ந்திருப்பது, தமிழகத்தைக் கொள்ளையடிக்கவே என விமர்சித்திருந்தார். 
 
இதற்கு அமைச்சர் ஜெயகுமார் பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, அண்ணாவின் மறைவுக்குப் பிறகு திமுக ஆட்சியிலிருந்த காலத்தில் ஆசியாவின் பணக்கார குடும்பமாக திமுக உருவெடுத்துள்ளதுதான் பெரிய சாதனை. 
 
மீத்தேன் திட்டம், கெயில் எரிவாயு திட்டம், என விவசாயிகளுக்குத் துரோகம் செய்தது திமுக. திமுக எங்களை விமர்சிப்பது வேடிக்கையாக இருக்கிறது. மக்கள் அதற்குத் தகுந்த பதிலடியைக் கொடுப்பார்கள். திமுக இனி தமிழகத்தில் தேறாது என்பதை மக்கள் நிரூபிப்பார்கள் என கூறியுள்ளார். 
அடுத்த கட்டுரையில்
நடுவானில் திடீரென பிறந்த குழந்தை! – இண்டிகோ நிறுவனம் வழங்கிய பரிசு!