திமுகவின் பொருளாளர் யார் ? ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு
திமுகவில் பொதுச்செயலாளராக இருந்தவர் க. அன்பழகன். இவர் கடந்த மார்ச் மாதம் சென்னையில் உயிரிழந்தார். அவரது மறைவுக்குப் பிறகு பொதுச்செயலாளர் பதவி காலியானது.
இதனையடுத்து, திமுகவின் முக்கியப் பதவியாக கருதப்படும் இப்பதவிக்கு அடுத்து புதிய பொதுச்செயலாளரை தேர்ந்தெடுப்பதற்காக பொதுக்குழு மார்ச் 29 ஆம் தேதி சென்னை அறிவாலயத்தில் கூடுவதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே திமுகவின் பொருளாஆர் துரைமுருகன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அடுத்து, கொரொனாவால் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் திமுகவின் பொதுக்குழு கூட்டம் ரத்தானது.
இந்நிலையில் திமுகவின் பொதுக்குழு கூடும்வரை பொருளாளராக துரைமுருகன் நீடிப்பார் என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
எனவே, துரைமுருகனின் ராஜினாமா கடிதம் மீதான நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.