வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 2 ஜூன் 2020 (12:04 IST)

கருணாநிதியின் பிறந்தநாளில் ஆடம்பரம் வேண்டாம்! – மு.க.ஸ்டாலின்!

நாளை முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் ஆடம்பர கொண்டாட்டங்கள் வேண்டாம் என மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் நாளை திமுக முன்னாள் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் பிறந்தநாள் திமுகவினரால் கொண்டாடப்பட உள்ளது. தற்போது கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் திமுகவினர் பல்வேறு நிகழ்ச்சிகளையும் எளிமையான முறையிலேயே நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கருணாநிதி பிறந்த நாளையும் எளிமையான முறையில் கொண்டாட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “நாளை தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளில் திமுகவினர் ஆடம்பரம் செய்ய வேண்டாம். அனைவரும் அவரவர் இடங்களில் சமூக ஒழுங்கை கடைபிடித்து கருணாநிதியின் பிறந்தநாளை கொண்டாட வேண்டும்” என கூறியுள்ளார்.

மேலும் கருணாநிதியின் பிறந்தநாளுக்காக மு.க.ஸ்டாலின் அவரது நினைவிடத்திற்கு செல்லும் போது கட்சியினர் அங்கே கூட வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.