1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 26 அக்டோபர் 2020 (17:43 IST)

விஜயதரணியா? விஜய் வசந்தா? கன்னியாகுமரி காங்கிரஸ் வேட்பாளர் யார்?

vijayvasanth vijayadharini
கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் அவர்கள் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் உடல்நல கோளாறு காரணமாக காலமானார் என்பது தெரிந்ததே. தற்போது அந்த தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
பாஜக தரப்பில் இருந்து ஏற்கனவே போட்டியிட்ட பொன் ராதாகிருஷ்ணன் மீண்டும் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தெலுங்கானா கவர்னராக உள்ள தமிழிசை சவுந்தரராஜன் அவர்களும் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் யார் என்பது குறித்த கேள்வி தற்போது எழுந்துள்ளது. தந்தை எம்பியாக இருந்த தொகுதியில் தானும் எம்பியாக வேண்டும் என்று விஜய் வசந்த் விரும்புவதாகவும் இதற்காக அவர் மேலிடத்தில் காய் நகர்த்தி வருவதாகவும் கூறப்படுகிறது 
 
ஆனால் அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் விஜயதாரணி கன்னியாகுமரி இடைத்தேர்தலில் போட்டியிட முயற்சித்து வருவதாகவும், இது குறித்து அவர் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது 
விஜயதாரணிக்கு விஜய் வசந்த் விட்டுக்கொடுப்பாரா அல்லது விஜய் வசந்த் தனது தந்தையின் தொகுதியை கைப்பற்றுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்