பைக்கில் வீலிங் செய்து கொண்டே பட்டாசு வெடித்து சாகசம்- மூன்று பேர் கைது
திருச்சியில் பைக்கில் வீலிங் செய்து கொண்டே பட்டாசு வெடித்து, பைக் சாகசத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்
சமீபத்தில் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக பைக் ஓட்டியதாக டிடிஎஃப் வாசனை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சமீபத்தில்தான் அவருக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
இதையடுத்து, திருச்சியில் பைக்கில் வீலிங் செய்து கொண்டே பட்டாசு வெடித்து, பைக் சாகசத்தில் ஈடுபட்ட தஞ்சாவூரை சேர்ந்த மணிகண்டன் என்பவரை தேடி வருவதாக தகவல் வெளியான நிலையில், 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இருசக்கர வாகனத்தில் சாகசங்களில் ஈடுபடுபவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்து ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.